எல்லாம் வல்ல குறிஞ்சிக்குமரன் அடியார்களே,
பல அடியவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குறிஞ்சிக்குமரன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமைகளில் நிகழும் மாலை வேளைப் சிறப்புபூஜையை அபிஷேகத்துடன் கூடிய விசேட பூஜை நிகழ்வாக நிகழ்த்த தீர்மானிக்கப் பட்டுள்ளது. இவ் விசேட பூஜைகள் 2024ம் வருட மாசி(February) மாதம் முதலாவது வெள்ளிக்கிழமையில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ஆரம்பிக்கப்பட்டு அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் ( உற்சவ தினங்கள் தவிர) நடைபெறும்.
இவ்விசேட உபயம் செய்ய விரும்பும் அடியவர்கள் பின்வரும் விபரங்களை பதிவு செய்து தமது உபய தினத்தை உறுதிப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
பொறுப்பாண்மைக்குழு,
குறிஞ்சிக்குமரன் ஆலயம்,
பேராதனைப் பல்கலைக்கழகம்